அமுல் நிறுவன பால் வந்தாலும் ஆவினுக்கு பாதிப்பில்லை என அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் பால், பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் சார்பில் தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ப்ளூ ஆகிய பாக்கெட்டுகளில் விற்பனையாகிறது. இதில் பச்சை ஒரு பாக்கெட் 22 ரூபாய்க்கும் ப்ளூ ஒரு லிட்டர் ரூ 20க்கும் ஆரஞ்ச் பாக்கெட்டின் விலை ரூ 30க்கும் விற்பனையாகிறது. இது தவிர ஊதா நிறத்தில் டிலைட் என்ற பாலும் விற்பனை செய்யப்படுகிறது. பால் பொருட்கள் மட்டுமல்லாமல் வெண்ணெய், நெய், தயிர், மோர் உள்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அது போல் குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் மூலம் பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. அமுல் நிறுவன பால் வந்தாலும் ஆவினுக்கு பாதிப்பில்லை என அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது. அமுல் பால் விற்பனையை தமிழகத்தில் தொடங்குவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை. பால் விற்பனையை அமுல் நிறுவனம் தற்போது தொடங்கவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் இரு மாதங்களில் சித்தூர் அமுல் பால் பண்ணையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பால் விற்பனையை தொடங்குவதாக அமுல் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை,பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும்..
0
Leave a Reply