25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக இருக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக இருக்கும்

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கு மூலதன முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தேவை என்றால், நாட்டில் நல்ல உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு முழுவதும் இந்த வருடம் பல புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட உள்ளன.இந்த புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட்ட பின் நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக மாறும். முக்கியமாக நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக மாறும்.
துவாரகா விரைவுச் சாலையின் 18.7 கிமீ பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ்வேயின் குர்கான் பகுதி முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையானது , புதிய செக்டார் பகுதியில் இருந்து NH-8 சாலையை இணைக்கும் வகையிலும், குர்கான் நகரின் பிற பகுதிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையிலும் திறக்கப்பட உள்ளது. டெல்லியில் மீதமுள்ள 10 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே முடிக்க இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 1 மணி நேரமாக உள்ள 18.7 கிமீ தூரம் இந்த சாலை திறக்கப்பட்ட பின் 20 - 25 நிமிடம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையாக இது கட்டப்பட்டு உள்ளது.
விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும். இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது,​​இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது. 

ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன. வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News