25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் விடுபட்ட சான்றிதழ்களின் நகல்களை 04.10.2026 சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தற்காலிக செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் விடுபட்ட சான்றிதழ்களின் நகல்களை 04.10.2026 சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய நலத்திட்டம், மாவட்ட நலவாழ்வு நல சங்கம் விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையங்களில் NHM திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 129 ஒப்பந்த செவிலியர்களின் பணியிடங்களை முற்றிலும் தற்காலிமாக தொகுப்பூதிய அடிப்படையில் (ரூ.21000 மாதம்) மாவட்ட நலசங்கம் மூலமாக நிரப்பிட 12.09.2026 முதல் 25.09.2026 அன்று மாலை வரை விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பெறப்பட்டது. 

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில் தகுந்த சுய சான்றொப்பமிட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழின் நகல், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழின் நகல், செவிலியர் படிப்பு (B.sc Nursing / DGNM) மதிப்பெண் சான்றிதழின் நகல்கள் (ஆண்டு வாரியாக), தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவு ரூ புதுப்பித்தல் சான்றிதழின் நகல், நன்னடத்தை சான்றிதழின் நகல், படிப்பு நிறைவுச் சான்றிதழின் நகல், இருப்பிட சான்று நகல் (ஆதார் அடையாள அட்டை / வாக்காளர் அடையாள அட்டை /குடும்ப அட்டை), சாதிச்சான்றிதழின் நகல் மற்றும் முன்னுரிமை சான்றிதழின் நகல் ஆகியவை விடுபட்டுள்ளன. மேற்கண்ட கல்வி தகுதிச்சான்றிதழ்களில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பின் தேர்ச்சி சான்றிதழ்களின் நகல்களை கட்டாயமாக குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல்களை மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், அறை எண்.126, முதல்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்-626002 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது உரிய வழியிலோ வருகின்ற 04.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். அதற்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களின் நகல்கள் பரிசீலிக்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News