25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் பொதுமக்களுக்கான மலையேற்றத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, மலையேற்றத்தில் கலந்து கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் பொதுமக்களுக்கான மலையேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, மலையேற்றத்தில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ தூரம் உள்ள மலையேற்ற திட்டத்தின் கீழ், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ப.தேவராஜ்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள் மலையேற்றத்தினை தொடங்கி வைத்து, மலையேற்றத்தில் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.10.2024 அன்று தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தினை தொடங்கிவைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக (றறற.வசநமவயஅடையெனர.உழஅ) என்ற வலைதளத்தை துவங்கி வைத்தார்.இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக்கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்;ர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 01.11.2024 ஆம் தேதி முதல் இணையவழியில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது மலையேற்ற திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும்.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில், திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ தூரம் உள்ள மலையேற்ற திட்டத்தில், இணையதளம் வாயிலாக பதிவு செய்து மலையேற்றம் செய்து கொள்ளலாம்.

அதன்படி, இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் திருவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்து வாகனம் மூலம் செண்பகத்தோப்பு வரை அழைத்து செல்லப்பட்டு, செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை  மலையேற்றத்தில் கலந்து கொண்ட பின்பு, வ.புதுப்பட்டியில் இருந்து வாகனம் மூலம் வனச்சரக அலுவலகத்தில் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள்.மேலும், இந்த வனப்பகுதியில், செண்பகத்தோப்பில், அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும்.

இது போன்று மலையேற்றம் செய்வதால், காடுகளில் பூஞ்சைகள், தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், ஊர்வன பாலூட்டிகள் போன்றவை சுற்றுச்சூழலை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும், காடுகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இணையதளம் மூலம் பதிவு செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்; என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், திருவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் திரு.செல்லமணி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 40 நபர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News