திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (14.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சாலைப் போக்குவரத்தை எளிதாக்குதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், சித்தலகுண்டு கிராமத்தில் அரசு மானியத்தில் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீடு, பாறைக்குளம் கிராமத்தில் வி.பி.ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.4.66 இலட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள், பி.தொட்டியாங்குளம் கிராமத்தில் ரூ.29.40 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகள், சென்னிலைக்குடி ஊராட்சியில் வி.பி.ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பில் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள், கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும்போது நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதுடன், பணிகளின் தரத்தில் எவ்விதக் குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply