25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள்  மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  (11.09.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை கீழ் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகள், தக்கைப்பூண்டு விதைகள் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.

மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறை கீழ் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தில் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட விசை களை எடுக்கும் இயந்திரத்தினை (பவர் வீடர்) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.

மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாக்குளம் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனத்தில் அமைக்கப்பட்ட மகாகனி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், முத்து வெங்கட்ராயபுரத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித்திட்டத்தின்  கீழ் பிறை ஊரணி தூர்வாரப்பட்டு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி ஊராட்சி, சிங்கம்மாள்புரம்  கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் நிலக்கடலையிலிருந்து எண்ணெய் பிரித்து, எடுத்தல் மற்றும் தரம்பிரிக்கும் மதிப்பு கூட்டு நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம், பணியின் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.முன்னதாக, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரப்படுக்கை 50 சதவீத மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பயனாளிகளுக்கு வழங்கினார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாணான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும்  உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, வேளாண்மை துணை இயக்குநர் (வே.வணிகம்) திருமதி செல்வி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News