25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 31.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில்  சேர்வது தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 31.05.2025(சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய  கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில்  கலந்து கொள்ளலாம்.

 இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த தகவல்களை இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News