25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், சேத்தூரில் (21.07.2026) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையினை பெற்றுத்தருவதற்காகவும், வியாபாரிகள் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி தேங்காய்காயினை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும் தேசிய வேளாண் மின்னணு சந்தை (e-NAM) திட்டத்தினை  செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை   (e-NAM) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு  பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து  மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள்  அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தை தொடர்பான தகவல்கள், ஏல விவரங்கள் மற்றும் விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும்.

மேலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு குறைக்கப்பட்டு, வெளிப்படையான விற்பனை நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதோடு, வேளாண் பொருட்களின் சந்தைப்படுத்தல் நவீனமயமாக்கப்பட்டு, வேளாண் வணிக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.

 எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தில் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து அரசின் இத்திட்டத்தின் முழுப் பயனையும் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்களின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, மாவட்டத்தில் 3 இடங்களில் தென்னை கொள்முதல் செய்து, மின்னணு சந்தை மூலம் சரியான விலை கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி தென்னை விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ்  சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News