கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க
பலரும்தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று கத்திரிக்காய் செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு
தேவையான பொருட்கள்: அரிசி தண்ணீர் 4 லிட்டர், காய்கறி கழிவு -2 கைப்பிடி அளவு, கடலை புண்ணாக்கு - 2 கைப்பிடி அளவு, வேப்பம் புண்ணாக்கு 2 கைப்பிடி அளவு,
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள கைப்பிடி அளவு . 2 வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒருவாரத்திற்கு அப்படியே விடுங்கள்.
அதற்கு பிறகு இதனை உங்களின் கத்திரிக்காய் செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதை காணலாம்.
0
Leave a Reply