25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தேர்தல் வருகிறது .நாட்டிற்கு உழைக்கும் நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் வருகிறது .நாட்டிற்கு உழைக்கும் நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. நல்லதொரு தலைவன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்களாகிய நம்முடைய ஒவ்வொரு ஒட்டும், நம் நாட்டின் நலனுக்கு சென்றடைய வேண்டுமே தவிர, இலவசங்களை அறிவித்து கொள்ளை கூட்டங்களுக்கு செல்ல விடாமல் தவிர்க்க நல்லதொரு ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை.ஓட்டிற்கு லீவு  கிடைத்து விட்டது என்று வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு ஓட்டுப் போடாமல் தவிர்ப்பது, நம் தலையில் நாமே மண் வாரி இறைப்பதற்குச் சமம் . 

 

அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை என்று டாஸ்மார்க் கடைகளைத் திறந்து அதிலிருந்து வரும் வருமானத்தில் பெண்களுக்கு இலவசமாக மாதம் இவ்வளவு ரூபாய் கொடுக்கிறோம், என்று கூறுவதில் நாட்டு மக்களின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.பெண்களுக்கு  2000 ரூபாய் வருகிறது.  நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை குடித்து தீர்க்கும் குடிகாரர்களை யார் காப்பாற்றுவார்கள்? அவர்களுடைய குழந்தைகளை யார் கவனித்துக்  கொள்வார்கள் ? சின்ன மீனாக 2000 ரூபாய் கொடுத்து விட்டு, பெரிய மீனான மது விற்பனை செய்து 10,000 ரூபாய் சம்பாதிக்கும் தலைவர்களுக்கா நம் ஓட்டு? சிந்தித்க்க வேண்டும். 

 

மக்கள்  ஆட்சியில் மக்களின் வாக்கிற்கே மதிப்பு. மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் செல்வோரில் யாருக்கு நம் வாக்கு அளிக்க வேண்டும். நாட்டுக்கு உழைக்கும் நல்ல மனிதரை, நாட்டு மக்கள் நலம் எண்ணிடுவோரை, நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உணவு தானியங்கள் விலைகளை குறைத்து உழவுத் தொழிலையும் உயர்ந்திடச் செய்து, ஊரெங்கும் ஜனங்கள் பசி பிணியைத் தீர்த்து, ஊக்கமாய் உழைக்கும் உத்தமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

மேடையில் பேசினால் போதாது, மேன்மையாய் வாழ்ந்திட திட்டங்கள் வகுத்து ,மென்மையாய் செயல்களை செய்து முடிப்போரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏக்கமாய் மக்களை வாழவிடாமல் ,ஏக்கமாய் பொருள்களை சேர்க்க விடாமல், நோக்கமாய் சமதர்ம வாழ்வை அமைத்து ,தக்க மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டாள் என்ன ? என்று அலட்சியப் படுத்தாமல் யோசித்து நல்லதொரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 

 

மாதா மாதம் நமக்கு ரூபாய் கொடுத்தால், இங்கு விலைவாசி எல்லா பொருட்களுக்கும் ஏறும் .அரசாங்கம் எல்லோருக்கும் பணம் கொடுக்க ,நம்மை ஏமாற்றி ,நம்மிடமே பணம் வாங்கி ,நமக்கே கொடுக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

விலைவாசி” கிர்” என்று உயருகிறது. வீட்டு வரி தண்ணீர் வரி, பத்திர செலவு, மின்சார வரி என்று. நாமெல்லாம் இலவசங்களை ஏற்க மறுக்கிறோமோ ,அன்றுதான் விலைவாசி உயர்வை தவிர்க்கலாம். நல்ல மனிதரைக் காணலாம்.

 

காலில் முள் குத்தக்கூடாது என்று இரும்பில் லாடம் அடித்தார்கள்.... 'என் எஜமான் என் மீது எவ்வளவு பாசம்!" என்று பூரித்துப் போனது அந்தக் குதிரை!அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல... இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது அதற்குப் புரியவில்லை!

 

சலுகைகள், இலவசங்கள் கொடுக்கப்படுகின்றன என்றால்... அங்கே சுதந்திரம் பறிக்கப்படப் போகிறது என்று அர்த்தம்!

 

மக்கள் சபைக்கும், சட்ட சபைக்கும் வரும் தேர்தலில் தலைமைக்குத் தகுந்த மனிதரை தேர்ந்தெடுப்பது மக்களாகிய நமது. கடமை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News