25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஐஸ்கிரீம்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐஸ்கிரீம்...

சுட்டெரிக்கும் வெயிலில் ஜில்லென்ற ஐஸ்கிரீம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று.

தமிழில் பனிக்கூழ் என்று அழைக்கப்படும் ஐஸ்கிரீம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'கிரீம் ஐஸ்' என்று அழைக்கப்பட்ட இப்போதைய உறை நிலை ஐஸ்கிரீம் 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் மன்னருக்கு பிடித்த உணவாக இருந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கோடைகாலத்தில், ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் அந்தக் காலத்திலேயே ஐஸ்கிரீம் வாங்க சுமார் 200 டாலர்கள் செலவழித்ததாக கூறப்படுகிறது.

1800 வரை, ஐஸ்கிரீம் என்பது சமூகத்தில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உண்ணும் கவர்ச்சியான இனிப்பு பொருளாக இருந்தது. ஐஸ்கிரீம் தயாரிப்பு நுட்பம் பலருக்கும் தெரியவந்தபோது ,அமெரிக்காவில் ஒரு தொழிலாக மாறியது. 1851-ம் ஆண்டில் ஜேக்கப் புஸ்சல் என்ற பால் பண்ணையாளர், மக்களுக்கு எளிதாக கிடைக் கும் வகையில் ஐஸ்கிரீம் விற்பனை தொழிலை தொடங்கினார்.

எந்திர குளிர் பதனம், நிலைப்படுத்தும் சாதனம், பேக்கிங் எந்திரங்கள். உறை பனி செயல்முறைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பரவி, ஐஸ்கிரீம் உற்பத்தி அதிகரித்தது. இன்றைக்கு உலக அளவில் குழந்தைகளின் மிகப்பிடித்தமான ஒன்றாக ஐஸ்கிரீம் தொடர்ந்து இருந்து வருகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News