அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.44.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், செட்டிகுறிச்சி ஊராட்சியில் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (19.10.2024) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், செட்டிகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடம் என மொத்தம் ரூ.44.10 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அருப்புக்க்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சசிகலா பொன்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply