விண்வெளியில் அடுத்த உலகப்போர்: சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளி மண்டலமே உலக வல்லரசு நாடுகளின் எதிர்காலப் போர்க்களமாக மாறும் என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
- தாக்குதல் உத்திகள்: நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்களை எதிரிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து தாக்குதல் நடத்தவும், விண்வெளியின் முக்கியப் பாதைகளைக் கைப்பற்றி எதிரி நாட்டு விண்கலன்களை வழிமறிக்கவும் முடியும்.
- விண்வெளி அதிகாரம்: பூமி-நிலவு இடைப்பட்ட மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி எதிரி நாடுகளை அச்சுறுத்த முடியும் என இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாங் ஜாஹுய் தெரிவித்துள்ளார்.
- வெளியீடு: இந்த ஆய்வுச் கட்டுரை 'ஜர்னல் ஆஃப் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல்' (Journal of Command and Control) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
0
Leave a Reply