25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அயர்லாந்து நாட்டு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையம்  வந்த வீரர்கள் மதுரையின் வரவேற்பை வியந்து ரசித்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அயர்லாந்து நாட்டு ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை விமான நிலையம்  வந்த வீரர்கள் மதுரையின் வரவேற்பை வியந்து ரசித்தனர்.

நேற்று அயர்லாந்து நாட்டு அணியினர், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ., 28ல் துவங்க உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, மதுரை விமான நிலையம்  வந்தனர்.. மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரவீன்குமார், விமான நிலையத்தில் வரவேற்றார்.  

வீரர்கள், அணியைச் சேர்ந்தவர்களுக்கு துாத்துக்குடியின் பெருமை சொல்லும் வகையில் சங்குபாசியும் வரவேற்கும் முகமாக சந்தனமாலையும் அணிவித்தார். தொடர்ந்து பரி வட்டத் துண்டை அணிவித்து கவுரவித்தார். மகளிர் சுயஉதவிக்குழுவினரின் ஆர்கானிக் சோப்பு உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம், போட்டிக்கான லோகோவை வீரர்களுக்கு வழங்கினார்.

விமான நிலைய வாசலில் பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், கரகாட்ட குழுவினர் காத்திருந்தனர். வீரர்கள் வெளியே வந்ததும்,  தாரை தப்பட்டை முழங்க, பாரம்பரிய ஆட்டத்துடன் வீரர்களை வரவேற்றனர். உற்சாகமடைந்த வீரர்கள், சந்தோஷத்துடன் கூடவே நடனமாடி ,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .மதுரையின்வரவேற்பை வியந்து ரசித்தனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News