25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


மக்கள் தொடர்பு திட்ட முகாம் 14.10.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 14.10.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண மக்கள் தொடர்பு திட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 2வது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, விருதுநகர் மாவட்டம், ‘திருச்சுழி வட்டம்,  பி.புதுப்பட்டி கிராமத்தில்” உள்ள “சமுதாயகூடத்தில்” வைத்து  14.10.2026ஆம் தேதியன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் 14.10.2026ஆம் தேதியன்று காலை 10.00 மணி  முதல் மதியம் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் திருச்சுழி வட்டத்தில் உள்ள பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.

               மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே “திருச்சுழி வட்டம் பி.புதுப்பட்டி கிராமத்தில்” உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நேரில் அளித்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும், அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News