28 வருடங்களுக்கு முன் வெளியான 'ஸ்படிகம்' மறுவெளியீடு வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் திரைப்படம்.
இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மோகன்லாலின் புதிய படம் அலோன் முதல் நாளில்10 லட்சங்கள் வசூலித்து, மோகன்லால் படங்களிலேயே அடிமட்ட வசூலைப் பெற்ற படமான போது, 1995 இல் வெளியான மோன்லாலின் ஸ்படிகம் திரைப்படத்தை 28 வருடங்களுக்குமுன் வெளியான ஸ்படிகம் மறுவெளியீடு செய்யப்பட்ட அன்று, அதிகாலை ரசிகர்கள் காட்சி, முன்பதிவில்27 லட்ச ரூபாய் வசூல் என்று அமர்களப்படுத்தியது.. ஸ்படிகத்தில் என்ன ஸ்பெஷல்?
இயக்குனர் பத்ரன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மம்முட்டியை வைத்து ஐயர் தி கிரேட் படத்தையும், மோகன்லாலை வைத்து அங்கிள் பன் படத்தையும் எடுத்தார். இதில் மம்முட்டி படம் ஹிட் அடிக்க, காமெடிப் படமான அங்கிள் பன் பாக்ஸ் ஆபிஸில் நொண்டியடித்தது. அதையடுத்து 1995 இல் ஸ்படிகம் படத்தை இயக்கினார். கண்டிப்பான கணக்கு வாத்தியார் சாக்கோ மாஸ்டரின் மகன் தாமஸ் சாக்கோவுக்கு கணக்கைவிட அறிவியலில் ஆர்வம், மகனின் ஆர்வத்தை மதிக்காமல் பூமியே கணக்கில்தான் சுத்துது என்று மற்ற மாணவர்கள் முன்பு மகனை அவமானப்படுத்த, அந்த டார்ச்சரில் மகன் தலைதிரிந்து ரவுடியாகிறான். விஞ்ஞானியாகும் புத்தி உள்ளவன் கல்குவாரி லாரி டிரைவராகிறான். அப்பனும், மகனும் பரஸ்பர எதிரியாகிறார்கள்.
மோகன்லாலுக்கு அப்படி அமைந்த படம்தான் ஸ்படிகம். சுருட்டிவிட்ட சட்டைக் கை, ரேபான் குளிர் கண்ணாடி, வெள்ளை வேட்டி, அதை எதிராளி முன் தூக்கிக்கட்டி தொடையை தடவும் மேனரிசம் என்று ஆடு தோமா கதாபாத்திரத்தை மலையாள சினிமாவின் அழியாத கதாபாத்திரமாக்கினார்.மாஸுக்கு மாஸ் கிளாஸுக்கு கிளாஸ் என்று கலந்துகட்டி அடித்த ஸ்படிகத்திடம் மலையாளிகள் உலகம் இன்றும் மயங்கிப் போய்தான் கிடக்கிறது.
அப்படி சாகாவரம் பெற்ற கதாபாத்திரமான ஆடு தோமாதான் ஸ்படிகத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன். அதனைத்தான் மலையாள ரசிகர்கள் இன்று திரையரங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் தமிழில் யுத்தம் என்று'டப்' செய்யப்பட்டு வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு சுந்தர் சி. ஸ்படிகத்தை வீராப்பு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து நடித்தார். ஸ்படிகத்தின் எந்தவொரு நேர்மறை அம்சமும் இல்லாத மோசமான ரீமேக்காக வீராப்பு எஞ்சியது. ஸ்படிகத்தை மலையாளத்தில் பார்ப்பதுதான் அட்ராக்ஷன்..
0
Leave a Reply