25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற  மகளிர் வாரியத்தில் விடுப்பட்டவர்களை  உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு  இரண்டாம் கட்டம் முகாம் 19.06.2025 அன்று நடைபெற உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் விடுப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டம் முகாம் 19.06.2025 அன்று நடைபெற உள்ளது

 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பயனாளிகள் இதில் பயன் பெறுவதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இதற்கான முதற்கட்ட முகாம்கள் கடந்த 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் 450 பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

      இதன் தொடர்ச்சியாக ‘கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னிகள், மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற  மகளிர் வாரியத்தில்,  விடுப்பட்ட  பெண் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு  இரண்டாம் கட்டம் முகாம்”  ஆனது அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற 19.06.2025 -அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.30 வரை  உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமிற்கு வருகை தரும்பொழுது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. விதவைசான்று/ஆதரவற்றவிதவை சான்று கணவரால் கைவிடப்பட்டவர் சான்று
2. தொலைபேசி எண்
3. குடும்ப அட்டை நகல்
4. ஆதார் நகல்
5. வருமான சான்று
6. சாதி சான்றிதழ்

இம்முகாமினை விடுப்பட்ட பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News