திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்பு
திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. , மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்..
கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை, பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும், கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை, தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
0
Leave a Reply