தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து ஆறு மாதங்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.ரேஷன் கார்டுகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்கவும், பயனாளிகளுக்கு சரியாக உதவிகள் கிடைக்கவும் கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பயன்படுத்தாமல் இருக்கும் கார்டுகளை ரத்துசெய்யஉத்தரவிடப்பட்டுள்ளது.நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
ரேஷன் கார்டை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பயனாளிகளுக்கு உதவி கிடைக்காமல் போகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல, ரேஷன் அரிசி திருட்டு போன்ற சம்வங்களும் அதிகமாக நடக்கின்றன.உண்மையில், ரேஷன் கார்டை நம்பியே நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அதன் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு போன்றவற்றை வைத்தே தங்களது பசியைப் போக்குகின்றனர். ஆனால், நிறையப் பேர் பெயரளவில் ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமலேயே விட்டுவிடுகின்றனர். நிறைய குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு என்பது வெறும் அடையாள அட்டை போலவே இருக்கிறது.
ரேஷன் கார்டில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கேரளா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருகின்றன.கர்நாடக மாநிலத்தில் பிபிஎல் கார்டுதாரர்களுக்கு மாநில அரசு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. கடந்த6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை தற்காலிகமாக ரத்து செய்ய உணவுத் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த6 மாதங்களாக ரேஷன் கிடைக்காத பிபிஎல் கார்டை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம்1.1 கோடி பிபிஎல் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால், கடந்த6 மாதங்களாக3.40 லட்சம் கார்டுதாரர்களுக்கு ரேஷன் வழங்கப்படவில்லை. அத்தகைய அட்டைகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு எந்த அறிவிப்பும் விடாமல் கார்டுகளை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரேஷன் கார்டுடன் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால், லட்சக்கணக்கான குடும்பங்கள் கவலையில் உள்ளனர். ஒருவேளை உண்மையாகவே ரேஷன் உதவி தேவைப்படும் குடும்பங்கள் கடந்த6 மாதங்களில் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். குறிப்பாக, இலவச ரேஷன் உட்பட எந்த வகையான அரசு வசதிகளும் கிடைக்காது. தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாது. ஓய்வூதிய வசதி கிடைக்காது. மத்திய அரசின் திட்டங்களை கூட பெறுவதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற நிறைய பின்னடைவுகள் ஏற்படும்.
0
Leave a Reply