25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலங்களில் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் மற்றும் பொது இடங்களிலும் குப்பைகள் மற்றும் இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழலையும், மனித நலனையும் பாதிக்கக் கூடும்.

 “தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, அத்தியாயம் VIII பிரிவு 153, 156, 157, 158, 160 மற்றும் 161-ன் படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு பொது சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும் நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் ஆகியவை தடைசெய்யப்படுகிறது.

 இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது”. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் திடக்கழிவுகளை பொது இடங்களில் தீயிட்டு எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்1920-ன்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News