ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 2-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழகம், பெங்கால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தமிழகத்தின் செல்வம் கார்த்தி ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் தமிழக அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3வது வெற்றியை பதிவு செய்த தமிழக அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
0
Leave a Reply