25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக தடகள சாம்பியன்ஷிப்தொடரில் அமெரிக்க அணி தங்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக தடகள சாம்பியன்ஷிப்தொடரில் அமெரிக்க அணி தங்கம் வென்றது.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தபெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் ஷா'காரி ரிச்சர்ட்சன்மெலிஸ்சா  உள்ளிட்டோர் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 41.75 வினாடியில்கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை,  முறையே ஜமைக்கா (41.79 வினாடி), ஜெர்மனி (41.87) கைப்பற்றின.

ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் நோவா லைஸ், கிறிஸ்டியன் கோல்மன், கென்னெத் அடங்கிய அமெரிக்க அணி, இலக்கை 37.29 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.இது நோவா லைஸ் வென்ற 2வது தங்கம். ஏற்கனவே 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். 

பெண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் இசபெல்லா, லின்னா, ஆலியா பட்லர், சிட்னி மெக்லாக்லின் அடங்கிய அமெரிக்க அணி (3 நிமிடம், 16.61 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது. வெள்ளி, வெண்கலத்தை முறையே ஜமைக்கா, நெதர்லாந்து வென்றன.

ஆண்களுக்கான 4x400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் ,அமெரிக்க அணி (2 நிமிடம், 57.83 வினாடி) வெள்ளி வென்றது. போட்ஸ்வானா அணி (2 நிமிடம், 57.76 வினாடி) தங்கத்தை கைப்பற்றியது.இம்முறை 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என, 26 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News