பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்டம், ஆண் குழந்தைகளுக்காக பொன் மகன் சேமிப்புதிட்டம் என்றஒரு திட்டம்உள்ளது. இதுஇன்னும் பலருக்குதெரியாது.
.தபால் நிலையங்களில்தான் இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும்ஒரு சிறியதொகையை ஆண்குழந்தையின் பெயரில்சேமித்து வைத்தால்எதிர்காலத்தில் பெரியதொகை கிடைக்கும்.இந்த திட்டத்தில்8.1 சதவீத வட்டிவழங்கப்படுகிறது. ஆனால்ஒவ்வொரு ஆண்டும்வட்டி விகிதம்மாறும். எனவேதற்போது நடைமுறையில்உள்ள வட்டிவிகிதம் என்னஎன்பது குறித்துதபால் நிலையத்தில்அல்லது இந்தியாபோஸ்ட் வெப்சைட்டில்நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
இத்திட்டம் தமிழ்நாட்டில்தான் செயல்பாட்டில்உள்ளது. இத்திட்டத்தில்நீங்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய்வரை முதலீடுசெய்ய முடியும். இத்திட்டத்தின் கீழ்மொத்தம் 15 ஆண்டுகளுக்குபணம்போட வேண்டும். ஆண் குழந்தைகள்இத்திட்டத்தில் இணையவயது வரம்புகிடையாது. தங்களதுமகனுக்கு கணக்குதொடங்க விரும்பும்பெற்றோர்கள் அருகில்இருக்கும் தபால்நிலையத்தில் குழந்தைபெயரில் கணக்குதொடங்கலாம்.
கணக்கு தொடங்கிய பிறகுஅந்தக் கணக்கைஎங்கு வேண்டுமானாலும்மாற்றிக் கொள்ளலாம்.குழந்தையின் வயது10 வயதிற்கு மேல்இருந்தால் அந்தக்குழந்தையின் பெயரிலேயேசேமிப்பு கணக்கைதொடங்கலாம்.10 வயதிற்குகுறைவாக இருந்தால்பெற்றோர் பெயரிலும்குழந்தை பெயரிலும்சேர்த்து கணக்குதொடங்க வேண்டும். குழந்தையின் பிறப்புசான்றிதழ், பெற்றோரின்முகவரிச் சான்று, ஆதார் கார்டு,பான் கார்டுமற்றும் குழந்தையின்புகைப்படம் ஆகியஆவணங்கள் இருக்கவேண்டும். இந்தஆவணங்களை இணைந்துவிண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும்.
கணக்கு தொடங்கிய நாள்முதல்7ஆவதுஆண்டில்50 சதவீதத்தொகையை எடுக்கும்வசதி இருக்கிறது.அதைத் திருப்பிசெலுத்த வேண்டியதில்லை.15 ஆண்டுகள் முடிந்த பிறகுகணக்கை மூடிவிடலாம்.பணத்தை முன்கூட்டியேஎடுக்க விரும்பினால்முதிர்வு தேதிக்குமுன்பாகவே பணம்செலுத்திய தேதியிலிருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கவேண்டும். அப்போதுதான்எடுக்க முடியும். இந்தத் திட்டத்தில்நிறையப் பேர்தற்போது ஆர்வமுடன்முதலீடு செய்துவருகின்றனர். உங்களுடையசெல்ல மகனின்எதிர்காலத்தைக் காக்கநீங்களும் கணக்குதொடங்கலாம்.
0
Leave a Reply