பழங்கள்,காய்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை .
பழங்கள் காய்கள் வாங்கும் போது நல்ல சிவப்பு நிறமுள்ள தாக பார்த்து வாங்க வேண்டும்.சிவப்புநிறத்தில் தான் இருப்பு சத்து அதிகம் உள்ளது.பச்சை காய்கறிகள் வாடாமல் இருக்க,காய்கறிகளை ஒரு கூடையில் போட்டு ஈரத் துணியினால் மூடி வைக்க வேண்டும்.இதனால், 3 அல்லது 4 நாட்களுக்கு காய்கறிகள் வாடாமல் இருக்கும்.
மழைக்காலங்களில் அரிசி பருப்பு டப்பாக்களில் வண்டுகள் பிடிக்கும். வண்டு, பூச்சிகளுக்கு காரமான வாசனை ஆகாது, பருப்பு அரிசி டப்பாக்களில் வண்டு வைக்கும். டப்பாக்களில் காய்ந்த மிளகாய் காம்பு இல்லாமல் அப்படியே போட்டு வைத்தால் மிளகாய் காரத்துக்கு வண்டுகள் வராது. பிரியாணி இலையை கூட போட்டு வைக்கலாம். பூண்டு பற்களை தோல் உரிக்காமல் அரிசி அல்லது பருப்பு டப்பாக்களில் புதைத்து வைப்பது நல்லது. பூண்டின் காரமான மணம் பூச்சிகளை விரட்டும் ாஆனால் பூண்டு ஈத்தன்மை உடையது. அவ்வப்போது மாற்ற வேண்டும் தீப்பெட்டியை போட்டு வைக்கலாம். அதிலுள்ள கந்தகம் பூச்சியை வரவிடாது. இவ்வளவு செலவு செய்து வாங்கிய மளிகை பொருட்களை இப்படி செய்து பாதுகாக்கலாம்.
0
Leave a Reply