திருமங்கலம் இராஜபளையம் நான்கு வழிச்சாலை
மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 744. மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான T. கல்லுப்பட்டி, ஸ்ரீலில்லிபுத்தூர், இராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கனரக வாகனங்கள் பயணித்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டுமென்ற மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.முதலில் 60 மீட்டர் அகலத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில் விவசாய நிலங்கள், மரங்கள், கிணறுகள் அதிகம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 45 மீட்டர் அகலத்தில் நான்கு வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைமய் வரையுள்ள 716 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1264 கோடி நிதி ஒதுக்கி கடந்த பலமாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திருமங்கலத்தில் இருந்து இராஜபாளைய் வரை இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் விறு விறுப்புடன் நடந்து வருகிறது.
0
Leave a Reply