'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து வட்டங்களிலும் (11 வட்டங்கள்) ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
தற்போது மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இவற்றில் இன்று 30.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று கபாடி(ஆண்கள்), கேரம்(ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்துபந்து(ஆண்கள்), கயிறு இழுத்தல்(ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைப்பந்து(ஆண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வட்டார அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகள்(100 மீ மற்றும் குண்டு எறிதல்) மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற்றது.
மேலும் இன்று 30.01.2026 அன்று மாவட்ட அளவிலான நேரடி விளையாட்டுப்போட்டிகளான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓவியப்போட்டி, கோலப்போட்டி (பெண்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளவிளையாட்டுப்போட்டிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப்போட்டிகள் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.தொடர்ந்து, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று கபாடி(பெண்கள்), கையுந்துபந்து (பெண்கள்) மற்றும் எறிபந்து (பெண்கள்) போன்ற விளையாட்டுப்போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், விருதுநகரில் வைத்து நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- பரிசுத்தொகையும், மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (30.01.2026) 'இது நம்ம ஆட்டம் 2026' - முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு,அரவிந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply