25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு அதிசயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு அதிசயம்.

ஆகாச வடிவத்தைப் பறைசாற்றும் வடிவம்.தஞ்சை பெரிய கோவிலில் கருவறையில் உள்ள12 அடி சிவலிங்கத்தை சுற்றிக்6அடி இடைவெளி விட்டு மற்றொரு வலிமையான சுவர் கட்டப்பட்டுள்ளது அவைகளின் மீதுதான் அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் விமானம் கட்டப்பட்டுள்ளது. அடுக்குகளின் நடுப்பகுதி வெற்றிடமாகவே உள்ளதுதான் இந்தக் கட்டடக் கலையின் மற்றொரு அதிசயம்.14வது அடுக்கின் மீது88டன் எடையுடைய சிகர கல் மற்றும்12 அடி உயர கும்பக் கலசத்தைத் தாங்கியுள்ள மேல் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இது தனதுஎடையின் வலிமையால் அதன் கீழுள்ள மொத்த கட்டமைப்பையும் உறுதி குலையாமல் அழுத்தி நிற்கச் செய்கிறது இது தான் அந் நாளைய தமிழர் அறிந்திருந்த கட்டடக் கலையின் சிறப்பாகும்.கருவறையின் மீது கட்டிய மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக. போற்றப்படுகிறது.தஞ்சை பெரிய கோவிலின் விமானம்216(66 மீட்டர்) அடிகள் உயரம் கொண்டது. இந்த விமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல், கிரானைட் ஆகும். கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கலசம், ஒரே கல்லால் செய்யப்பட்டு, 80 டன் எடையுடையது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News