குக்கர் ஸ்குரு சரி செய்ய
குக்கரில் கைப்பிடி ஸ்குரு அடிக்கடி லூஸ் ஆனால்,. அந்த ஸ்குருவை கழட்டி எடுத்து விடுங்கள். அதில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் நூலை, தேவையான அளவு சுற்றிக் கொள்ளுங்கள். (பூ கட்டும் நூல்,அல்லது துணி தைக்கும் நூலை கூட இரண்டு மூன்றாக மடித்து இந்த ஸ்குரூவில் சுற்றிக் கொள்ளலாம்) இப்போது நூல் சுற்றிய இந்த ஸ்க்ரூவை, குக்கர் கைப்பிடியில் வைத்து டைட் செய்து வைத்தால், வருடக் கணக்கானாலும் ,இந்த ஸ்க்ரூ லூஸ் ஆகாது.
பால் சூடேற்றும் முன் முதலில் தண்ணீர் ஊற்றி பின் பால் ஊற்றி காய்ச்சுங்கள். இதனால் பாத்திரத்தில் பால் அடிப்பிடிக்காது. கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம்இருக்காது
பாலை நன்கு காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ,சூடு படுத்திக்கொண்டால் போதும் ..ஃபிரெஷாக போட்டால் அது பொங்கி கொதிக்கும் வரை கிட்சனில் நிற்க வேண்டியிருக்கும்.
0
Leave a Reply