மாடித்தோட்டம் விளைச்சல் அதிகரிக்க
மாடித்தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க நிலத்தின் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்துவைக்க வேண்டும்.
இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும், அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் அதிகரிக்கலாம்.
ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும். நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறிவிட வேண்டும்.
0
Leave a Reply