இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ....
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் ஏசி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. என்னதான் ஏசி மாட்டினாலும் நீண்ட நேரத்திற்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது. இயற்கையான முறையில் வீட்டை எப்படியெல்லாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் .வீட்டைச் சுற்றி மரம் செடிகளை வளர்த்தால், வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். சூரிய வெப்பத்தை இவை தடுத்து விடுவதால்,இயற்கையான நல்ல குளுமையான சூழலை வீட்டில் நீங்கள் உணர முடியும்., கோடை காலங்களில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். போதிய காற்றோட்ட வசதி இல்லாதவர்கள் வீட்டில்Exhaust Fan பொருத்துவது நல்லது. இது வீட்டில் உள்ள சூடான வெப்பக் காற்றை வெளியே தள்ள உதவும்.
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அடிக்கடி நீர் அருந்துவதால் உங்கள் உடலின் வெப்பநிலை சராசரியாகப் பராமரிக்கப்படும். இதனால் வெளிப்புற வெப்பம் உங்களை அதிகம் தாக்காமல் இருக்கும். வீட்டில் தேவை இல்லாமல் இயங்கி, வெப்பத்தைவெளியேற்றும் ஃபேன், பல்ப், பிரிட்ஜ், கணினி போன்றவற்றை அணைத்து விடுங்கள். அவற்றை அணைப்பது உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்கும்.வீட்டில் தேவையில்லாமல் அடைத்துக் கொண்டிருக்கும் சாமான்கள், காகிதங்கள், புத்தகங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி, வீட்டை முடிந்த அளவுக்கு காலியாக வைத்திருங்கள். இது, வெப்பம் உங்கள் வீட்டில் அதிகம் தேங்காமல் ,உங்கள் வீட்டில் காற்றோட்டம் அதிகமாகி எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் பெயிண்ட் அடிப்பது, உங்கள் வீட்டை குளுமையாக வைத்திருக்க உதவும். அல்லது மொட்டை மாடியில் தென்னை ஓலை போட்டு அதன் மேல் நீர் தெளித்து வையுங்கள். இதன் மூலமாக வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த முறைகளைப் பின்பற்றி ஏசி இல்லாமலேயே உங்கள் வீட்டை கோடை காலத்தில் குளுமையாக வைத்திருக்க முடியும்.
0
Leave a Reply