இடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்க..
இடி, மின்னல் தாக்கும் போது திறந்த வெளியில் நிற்கக்கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம், உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும்.
குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
மின்வாரியத்தின் மின்மாற்றிகள், துணை மின்நிலையத்துக்கு போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும், அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கும் கம்பிகளை தொடுவதையும், மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்கவும்.
மின்சார வயர்கள் பதிக்கப்பட்டுள்ள சுவர்களில் ஆணிஅடிக்க வேண்டாம்.
மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். அந்தத் தீயை தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி, கரியமில வாயு தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
0
Leave a Reply