மாடித் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய முக்கிய கீரை வகைகள்.
பாலக் கீரை, பசலைக்கீரை, தண்டு கீரை, மணத்தக்காளி கீரை மற்றும்பொன்னாங்கண்ணி கீரை. அகலமான தொட்டிகள் அல்லது பேக்குகளில்(Growbags) தேங்காய்நார்க்கழிவு மற்றும்மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி எளிதாகப்பயிரிடலாம்.
மாடித் தோட்டத்தில் வளர்க்கும் கீரை வகைகள்
பாலக் கீரை - சத்துக்கள் நிறைந்த இக்கீரை சிறிய தொட்டிகளிலும் மிக விரைவாக வளர்ந்து பலமுறை அறுவடை தரக்கூடியது.
பசலைக் கீரை - கொடி வகைப் பசலை மற்றும் தண்டுப் பசலை இரண்டும் மாடித்தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது,.
அரைக்கீரை மற்றும் முளைக்கீரை - குறைந்த ஆழமுள்ள பாத்திகள், தொட்டிகளில் விதைத்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை செய்யலாம்.
மணத்தக்காளி கீரை - வயிற்றுப்புண் ஆற்றும் மருத்துவ குணம் கொண்டது, நிழல் மற்றும் வெயில் இரண்டிலும் நன்றாக வளரும்.
பொன்னாங்கண்ணி கீரை - தண்டுப் பகுதியை ஒடித்து நடுவதன் மூலமே எளிதாக புதிய செடிகளை உருவாக்கலாம்.
சம பங்கு செம்மண், மண்புழு உரம் அல்லது தொழுஉரம் மற்றும் தேங்காய் நார்க்கழிவு (Coco peat) கலக்க வேண்டும்.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 மணி நேரம் நேரடி சூரிய ஒளிபடும் இடத்தில் தொட்டிகளை வைக்க வேண்டும்.
தினமும் மிதமான அளவில் நீர் ஊற்ற வேண்டும், தேங்க விடக்கூடாது.
0
Leave a Reply