த்ரிஷாவுக்கு 'கருப்பு ஸ்டார்' பட்டம்... ரசிகரின் பதிவுக்கு 'குந்தவை' கொடுத்த எக்ஸ்பிரஷன்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளதால் த்ரிஷா செம்ம குஷியில் உள்ளார்.
இந்நிலையில், த்ரிஷாவின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தின் தலைப்பை மையமாக வைத்து, அவருக்கு 'கருப்பு ஸ்டார்' என்ற புதிய பட்டத்தைச் சூட்டியுள்ளார். ரசிகரின் இந்த பாசமான பதிவைக் கவனித்த த்ரிஷா, "இது ரொம்ப அழகா இருக்கு... தேங்க்யூ" எனத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ரீ-ட்வீட் செய்து பதிலளித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
Leave a Reply