உளுத்தம் கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு – 3 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)
மிளகாய்வற்றல் – 6,தேங்காய் – கால்மூடி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
பூரணம் செய்ய:
1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய்வற்றலுடன் உப்பும் சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில்(5 நிமிடங்கள்) வேக விட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்..
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொல பொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும்.
மேல்மாவு செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
2. பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய:
தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும்.
பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார். எலும்புகளைப் பலப்படுத்தும் உளுத்தம் கொழுக்கட்டையை மாதம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்.வரலெட்சுமி நோன்பின் போதும் நவராத்திரி காலங்களிலும் இவ்வகைக் கொழுக்கட்டைகளை நைவேத்தியமாக்கிப் பிறருக்கும் வழங்கலாம்.
0
Leave a Reply