25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


3000 இந்திய ஊழியர்களை  அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

3000 இந்திய ஊழியர்களை அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள சுமார் 3,000 ஊழியர்களை அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால், சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஆரக்கிள் நிறுவனம் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஆரக்கிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால், பல ஊழியர்களின் பங்களிப்பு இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்தியாவில் உள்ள பல ஊழியர்கள் பணிநீக்கத்தால்,  தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. ஆரக்கிள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, மற்ற ஐடி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனித ஊழியர்களின் வேலைவாய்ப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News