25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உத்தரகாண்ட் தேசிய விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உத்தரகாண்ட் தேசிய விளையாட்டு போட்டிகள்

 டேபிள் டென்னிஸ் 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர்.முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்து, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.நீண்ட போராட்டத்தின் முடிவில், 4-3 செலினா (11-7, என்ற 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். 

ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டி ராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். சத்யன் 3-4 ) என்ற  (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில்  வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜாஷ் மோடி தங்கம் வென்றார். 

கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர் பன் ஜோடி 3-2 என தங்கப் பதக்கம் வென்றார். 

ஹாக்கி 

பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4,1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. 

மல்யுத்தம்   

பெண்களுக்கான 'பிரீஸ் டைல்' மல்யுத்தத்தில் மகா ராஷ்டிராவின் சுவாதி(53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா(57 கிலோ) தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News