வல்லாரைக் கீரை சட்னி.
தேவையான பொருட்கள் :
வல்லாரை கீரை - 1 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது),
சின்ன வெங்காயம் - 10 முதல் 12 (அல்லது பெரிய வெங்காயம் - 1),
தக்காளி - 1 (நறுக்கியது),
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் - 3 அல்லது 4 (காரத்திற்கு ஏற்ப),
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
செய்முறை :
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி, சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரை கீரையை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
இறுதியாக தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து இறக்கி, குளிர வைக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து, தேவையான உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு சட்னி பதத்திற்கு அரைத்து எடுக்கவும். வல்லாரைக் கீரை சட்னி தயார்.
0
Leave a Reply