வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை என்றாலே, பெண்களுக்கு ஒரு சிறப்பான நாளாகும். இந்த நன்னாளில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வீட்டிற்கு அம்மனை அழைத்து, பூஜை செய்து வணங்குவதாகும். இந்த பூஜையில் பெண்கள் விரதம் இருந்து, வீட்டிற்கு சில பேரை அழைத்து பூஜை செய்த பின், தாம்பூலம் வழங்குதல் நடைபெறும்.
இந்த நாளில் கல்யாணம் ஆன பெண்கள் விரதம் இருப்பதன் மூலம் நீண்ட நாள்கள் தாலி பாக்கியத்தைப் பெறுவர் என கூறுவர். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமையவேண்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
.இந்த பூஜையில் நம்மாள் எது முடியுமோ அதை படைத்து, அம்மன் பாடல்களைப் பாடி,சுமங்கலிப் பெண்களை அழைத்து உங்களால் முடிந்தவற்றை கொடுத்து அம்மனை வழிபடலாம்.வீட்டில் மகாலட்சுமி, அஷ்டலட்சுமி அருள் கிடைக்கவும், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
.
0
Leave a Reply