வத்தல் குழம்பு பொடி.
தேவையான பொருட்கள் :- வத்தல் 1 கப், மல்லி விதை 1 கப், துவரம்பருப்பு கால் கப், கடலை பருப்பு கால் கப், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், அரிசி 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 முதல் 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்,
செய்முறை :- அனைத்தையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து ஆறியவுடன் நைஸாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழம்பு வைக்கும் பொழுது வத்தக் குழம்பு பொடி சேர்த்து சமைத்தால் ரெம்ப ருசியாக இருக்கும். சுண்ட வத்தல், கடுகு, கருவேப்பிலை, தாளித்து வெங்காயம், பூண்டு, பச்ச மிளகாய் சேர்த்து புளி கரைத்து ஊற்றி தேவையான அளவு வத்தக் குழம்பு பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்ததும் எடுத்து வைக்க வேண்டும்.
0
Leave a Reply