காய்கறி சட்னி
தேவையானப்பொருட்கள்:
கேரட் - 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு. சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை5, பெரிய வெங்காயம்2, தக்காளி3, இஞ்சி1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6. கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய். பெருங்காயம், புளி, உப்பு. கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
0
Leave a Reply