வேனல்கட்டிகள் மறைய
வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும்.
வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும். வேனல்கட்டிகள் வந்தால், அவற்றை பிதுக்கி சீழை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம்.
சீரகத்தை தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து, கட்டி உள்ள இடத்தில் தடவ, கட்டிகள் மறையும்.
சிறிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை கட்டியின்மீது தொடர்ந்து தடவி வர கட்டிகள் கரையும். ஒரு நாளில் 4-5 முறை தடவவும்.
ஒரு தேக்கரண்டி பாலேடுடன் ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கட்டிகளின் மேல் தினம் 3-4 முறை தடவினால் கட்டிகள் மறையும்.
வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் . சேர்த்து குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும், கட்டி பழுத்து உடைந்து விடும்
0
Leave a Reply