ஆசிய விளையாட்டில் வெற்றி: இந்திய வீரர்களைப் பாராட்டிய பிரதமர் மோடி.
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்தின் வித்யா ராம் ராஜ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பாராட்டினார்.
டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆசிய விளையாட்டில் கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்தின் வெற்றி. வரும் 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது உறுதி” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0
Leave a Reply