வினேஷ் போகத்துக்கு தாய்நாடு தந்த உற்சாக வரவேற்பு
பாரிஸ் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது மல்யுத்த 150 கிலோ பிரிஸ்டைல் பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார். வினேஷ் போகத் பைனலுக்கு முன் நடந்த எடை சோதனையில் 100 கிராம். கூடுதலாக இருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்தார். குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் வழங்க கோரிய இவரது அப்பீலை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது.
பாரிசில் இருந்து கிளம்பிய வினேஷ் நேற்று டில்லி விமான நிலையம் வந்திறங்கினார்.. இவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சக மல்யுத்த நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட வினேஷ், சாக்சி மாலிக்கின் தோளில் சாய்ந்தவாறு அழுதார்.
டில்லியில் இருந்து மதியம் 11 மணி அளவில் திறந்த ஜீப்பில் ஹரியானாவில் உள்ள தனது சொந்த கிராமமான பலாலிக்கு புறப்பட்டார் வினேஷ் .இவரது ஜீப்பை பின் தொடர்ந்து பலரும் கார்களில் அணிவகுத்து வந்தனர். செல்லும் வழியில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
வினேஷ் கூறுகையில் எனக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் நன்றி, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி பாரிஸ் ஒலிம்பிக்கில் எனக்கு தங்கப்பதக்கம் தர வில்லை. ஆனாலும் இந்திய மக்கள், தாய்நாடு தந்த உற்சாக வரவேற்பு, என் மீது காட்டிய அன்பும், மரியாதையும் ஆயிரம் தங்கப் பதக்கங்களை விட அதிகம் என்றார்.
0
Leave a Reply