25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விருதுநகர் மாவட்டம் 100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் 24.05.2025 அன்று நடைபெறவுள்ள விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் 100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் 24.05.2025 அன்று நடைபெறவுள்ள விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டி

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில்  விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 24.05.2025 அன்று காலை 06.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்யும் வகையிலும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதுணையாகவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளது.இதில் ஆண்களுக்கு 12 கி.மீ தூரம் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரம் என்ற வகையிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள்,  இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என  அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20,000/- இரண்டாம் பரிசு ரூ.15,000/-, மூன்றாம் பரிசு ரூ.10,000/- நான்காம் பரிசு ரூ.7000/- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.5,000/- என வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களை
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdasYWstnFs_F92vdaaBVbYhy7fV0wU8NjWc3G0p1T2KLwIow/viewform?usp=header   என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இப்போட்டிகள் குறித்த விவரங்களுக்கு 86082-04154, 94864-54521, 99769-03873 ஆகிய  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News