25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.03.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே அதிகப்படியான குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றமைக்காக விருதுகள் பெற்ற  மருத்துவ அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆம் ஆண்டில்  நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4129 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

மேலும், 2023-24 ஆம் ஆண்டில்  மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்ப நல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்து, விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.அதன்படி, முதலிடத்திற்கான விருதினை பெற்ற இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி அவர்களும், இரண்டாமிடத்திற்கான விருதினை பெற்ற கன்னிச்சேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர்(குடும்ப நலம்) மரு.விமலா அவர்கள், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, துணை இயக்குநர்(காசம்) மரு.கே.ராஜன், துணை இயக்குநர்(தொழுநோய்) மரு.மணிகண்டன், மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News