25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


Virupaksha Temple: - விருபாக்ஷா கோயில்:
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Virupaksha Temple: - விருபாக்ஷா கோயில்:

கர்நாடக மாநிலத்தின் ஹம்பியில் தும்பபத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள விருபாக்ஷா கோயில், ஹம்பியில் உள்ள கோயில்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், சிவபெருமானுக்கு விருபாக்ஷா என்னும் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில்இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும்.ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில்யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் (UNESCO World Heritage Site) ஒன்றாக உள்ளது. 

கோவில் திறந்திருக்கும் நேரம்: 9:00 AM – 1:00 PM 5:00 PM – 9:00 PM

ஹோஸ்பெட்டிலிருந்து11 கி.மீ தொலைவிலும்; மாவட்டத் தலைநகர் பெல்லாரியிலிருந்து62 கி.மீ. தொலைவிலும்; பட்டடக்கல்லு 108 கி.மீ. தொலைவிலும்; ஐஹோளே109 கி.மீ. தொலைவிலும்; பாதாமி118 கி.மீ. தொலைவிலும்; மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து339 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சாலை வழியாக ஹோஸ்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூருவிலிருந்து ஹம்பியை அடையலாம்..இக்கோவில் விருபாட்சருக்கும்(சிவனுக்கும்) பம்பாதேவி அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விருபாட்சருக்கு பம்பாபதி என்ற பெயர் உள்ளபடியால் இக்கோவில் பம்பாபதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா என்ற பெயர் மருவி ஹம்பி என்று அழைக்கப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. விருபக்ஷர் விஜயநகரப் பேரரசர்களின் குலதெய்வமும் காவல் தெய்வமும் ஆவர். எனவே இக்கோவில் விஜயநகர அரச வம்சத்தவர்களால் புனிதம் மிக்க கோவிலாகக் கருதப்பட்டதுகருவறையில் விருப்பாக்ஷருக்கு எதிரே நந்தியம்பெருமானின்மூன்று சிலைகள் அமைந்துள்ளன. அக்காலத்தில்மூன்று தலை ஓர் உடலுடன் நந்தியம்பெருமான் அதீத சக்தியுடன் திகழ்ந்தாராம். மாலிக்காபூர் படையெடுப்பின் போதுநந்தியின் முகத்தையெல்லாம் சிதைத்து விட்டபடியால் மூன்று தனித் தனி நந்திகளைப் புதிதாக அமைத்துள்ளார்களாம்.

பிராகரத்தைச் சுற்றி பாடலேஸ்வரர் முக்தி நரசிம்மர் மஹிஷாசுர மர்த்தினி முதலிய சன்னதிகள் பாதி சிதைந்த நிலையில் உள்ளன. இது மட்டுமின்றி சப்தமாத்ரிகா, சூரியநாராயணா, தரகேச்வரா, சரஸ்வதி, வித்யாரண்யா, பார்வதி, புவனேச்வரிஆகிய துணை தெய்வங்களுக்குச் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் பார்வதி மற்றும் புவனேச்வரி சன்னதிகள் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். வித்யாரண்யர் சிலை கி.பி.20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சபா மண்டபம் என்ற அரங்க மண்டபம் கிருஷ்ணராய தேவராயரால் கி.பி.1510 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்குச் சான்றாக பல விஜயநகர கட்டிடக்கலைக் கூறுகளை கொண்டு அமைந்துள்ளது. சங்கீத மண்டபம் சன்னதிக்கு எதிரே உள்ள56 தூண்கள் ஒவ்வொன்றும் தட்டினால் வெவ்வேறு இசைக் கருவிகளின் ஒலி வரும்படி கட்டப்பட்டுள்ளது. தூண்கள், கோவில் மடைப்பள்ளி, விளக்குத்தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News