டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ் இந்தியாவின் மணிகா பத்ரா, மனுஷ் ஷா வெற்றி.
ஓமனில், டபிள்யு. டி.டி., கன்டென்டர் டேபிள்டென்னிஸ் தொடர் ஓமனில்,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3–2 (9–11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் மனுஷ் ஷா, சீன தைபேயின் குவான்-ஹாங் குவோ ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனிஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் வென்றனர்.
0
Leave a Reply