கோதுமை மாவு பிளம் கேக்
தேவையான பொருட்கள்
2 கப் கோதுமை மாவு,1கப் நாட்டுசர்க்கரை,3/4 கப்உருக்கிய வெண்ணெய்,1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா,
1 டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்,2டேபிள்ஸ்பூன் தயிர்,1/2 கப் பால்,1 டேபிள்ஸ்பூன் தேன்,1/4 கப் டேட்ஸ்,1/4 கப் வால்நட்ஸ், முந்திரி,1/4 கப் திராட்சை டூட்டி புரூட்டி
செய்முறை
கோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சலித்து வைத்துக் கொள்ளவும்.
கேரமல் ப்ரூட் கலவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
வெண்ணெய்,சர்க்கரை, தேன் எல்லாம் சேர்த்து கிரீமியாக பீட் செய்யவும். தயிர்,எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
பின்னர் மாவுக்கலவை சேர்த்து கட் அண்ட் போல்ட் முறையில் கலந்து விடவும்.
பின்னர் கேரமெல் ப்ரூட் கலவையை ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின்னர் கேக் கலவையை மோல்டில் ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரீயில் பத்து நிமிடங்கள் பிரஹீட் செய்து 55 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கோதுமை மாவு பிளம் கேக் தயார்.
இப்போது மிகவும் சுவையான சத்தான மிருதுவான கோதுமை மாவு பிளம் கேக் சுவைக்கத்தயார்.
0
Leave a Reply