வெள்ளை முடி கருப்பாக மாற ......
கருஞ்சீரகம் 100 gm, மருதாணி பச்சை இலைகள் இரண்டு கைப்பிடி, இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் திக்கான கரைத்த புளி 20 gm அளவு சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கொள்ளவும். முடியை நல்ல ஷாம்பு போட்டு முதல் நாள் தலையை எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் அலசி காய விட்டு மறுநாள் அரைத்த விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தலையில் ஊறவிட்டு அதன் பிறகு தலையை எந்த ஒரு ஷாம்பும் இல்லாமல் வெறும் தண்ணீரில் நன்றாக தலையை அலசி முடியை நல்ல வெயிலில் காய விட்டால் முடி நல்ல கருப்பாகி விடும் இப்படி வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இப்படி செய்தால் முடி மூன்றே மாதத்தில் நல்ல கருப்பாகி விடும். ஆனாலும் தொடர்ந்து செய்யவேண்டும்.
0
Leave a Reply