டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் யார் ?
TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால், 86 வயதில் , மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ,அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. டாடா குழும் தலைவராக 21 ஆண்டுகளாக இருந்து வந்த ரத்தன் டாடா, கடந்த 2012-ம் ஆண்டு அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய, தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றவர். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் .2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா குழுமத்தின் பொறுப்பை சைரஸ் மிஸ்திரி ஏற்றார். இவர் சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்தார். அதன் பிறகு தற்போது டாடா குழுமம் என் சந்திரசேகர் தலைமையில் உள்ளது. அதேசமயம், டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய ரத்தன் டாடா, மாயா, லியா மற்றும் நெவில் ஆகியோருக்கு வழிகாட்டியாக இருந்தார். அவர்கள் மூலமாக டாடா குழுமத்தின் வெற்றிகளில் கவனம் செலுத்துகிறார் இதில் மாயா டாடா மிக முக்கியமானவர் இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் பேஸ் பிசினஸ் ஸ்கூலில் தனது கல்வியை முடித்த இவர், அடுத்து டாடா குழுமத்தின் தலைவராகலாம் என சில காலமாகவே பேச்சு இருந்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ரத்தன் டாடா தனது எளிமைக்கு மிகவும் பெயர்போனவர். அதேபோல், 34 வயதான மாயா டாடாவும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகியே இருப்பவர் என சொல்லப்படுகிறது.ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவின் மகள். இவர் ரத்தன் டாடாவின் மருமகள் முறையில் வருவதாக சொல்லப்படுகிறது. இவரது தாயார் அல்லு மிஸ்திரி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார் .அதன்படி, சைரஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மென்ட் குரூப் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி குடும்பம் 18.4% பங்குகளை வைத்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவருக்கு அதிக பங்கு இருப்பதால் அவர் எதிர்காலத்தில் டாடா குழுமத்தின் பொறுப்பை மாயா டாடா ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.நோயல் டாடாவிற்கு அடுத்து இந்த மூவரில் ஒருவர் டாடா குழுமத்தின் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
0
Leave a Reply